Subscribe to
Posts
Comments

Archive for September, 2006

பாடல்: கற்பகவல்லி நின்
குரல்:  டி எம் சௌந்தரராஜன்
ராகம்: ராகமாலிகா
[ஆனந்த பைரவி]
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி
(கற்பகவல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பகவல்லி)
[ஆனந்த பைரவி]
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
(கற்பகவல்லி)
[கல்யாணி]
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி செய்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா
(கற்பகவல்லி)
[பாகேஸ்ரீ]
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் [...]

Sirkazhi - Vinaayaganey

பாடல்: வினாயகனே வினை தீர்ப்பவனே
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
ராகம்: கீரவாணி
வினாயகனே வினை தீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
(வினாயகனே)
குணானிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
(வினாயகனே)
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கண நாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
(வினாயகனே)

TMS - Karpanai Enraalum

பாடல்: கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை)
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(கற்பனை)
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை)

TMS - Ullam Uruguthaiyaa

பாடல்: உள்ளம் உருகுதய்யா முருகா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
ராகம்: பீம்ப்ளஸ்
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(உள்ளம்)
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா
(உள்ளம்)
பாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம்)
ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம்)

Sirkazhi - Neeyallaal

பாடல்: நீயல்லால் தெய்வமில்லை
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
நீயல்லால் தெய்வமில்லை
எனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா
(நீயல்லால்)
தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்
(நீயல்லால்)
வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுதிடலே
இங்கு யான் பெற்ற இன்பம்
(நீயல்லால்)

பாடல்: காக்கைச் சிறகினிலே நந்தலாலா
வரிகள்: சுப்ரமணிய பாரதி
ராகம்: யதுகுல காம்போதி
தாளம்: ஆதி
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியனிறம் தோன்றுதையே நந்தலாலா
(காக்கை)
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
(காக்கை)
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
(காக்கை)

மௌன ராகம்
இளையராஜா
பாடல்: மன்றம் வந்த தென்றலுக்கு
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல்
(மன்றம் வந்த)
தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்
(மன்றம் வந்த)
மேடையைப் போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும் [...]

காதல் தேசம்
ஏ ஆர் ரஹ்மான்
(1997)
பாடல்: எனைக் காணவில்லையே நேற்றோடு
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம் குழுவினர்
வரிகள்: வைரமுத்து
அன்பே…
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா…
என் வாசல்தான்…
வந்தால்…
வாழ்வேனே நான்
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக் குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ [...]

பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
இசை: ஏ.ஆர்.ரஹமான்
ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வலிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் [...]

Vidya Vinaya Vinoda

Hi Friends,
      If you end up here and if you know one of your friend is in this photo, kindly ask them to ping me. Among this photo, if you are not the one who is in touch with me - write to me.

Yours,
Shiva

Next »